இந்த நாட்டில் இருப்பதாக கூறப்படுகின்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கும்,வைத்திருந்தவர்களுக்கும், அவ்வாறு வைக்காதவர்களுக்கும் கடவுள் நம்பிக்கையை போல நம்பிக்கை வை, நம்பிக்கை வை என்று பிறர் மீது ஜனநாயகத்தை தள்ளித்தினித்து கவிழ்ப்பதன் மூலம் ஜனநாயகத்தை தூக்கி நிறுத்திவிட கனவு கானும் ஜனநாயகவாதிகளுக்கும் ஆக மொத்தத்தில் இந்திய ஜனநாயகத்தை கொண்டாடுபவர்களுக்கும் அதன் தோலை உரிப்பவர்களுக்கும் என அனைவருக்கும் இந்த நாட்டில் ஜனநாயகம் ஊற்றெடுக்கும் பன்றித்தொழுவத்திலிருந்து பாய்ந்தோடி வடிந்து சொட்டும் பெருச்சாளிகள் புகும் சாக்கடை சந்துகள் வரை நிரம்பியிருப்பது 'சாட்சாத் ஜனநாயக பகவானே' என்பதில் மாறா நம்பிக்கை கொண்டுள்ள எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் ஒரு கட்டுரையை தந்துள்ளார்.

முன்குறிப்பு :
கட்டுரை உணர்வு சார்ந்ததாம், ஜெயமோகன் கூறியுள்ளார். முற்றிலும் உண்மை, எனவே தான் அவருடைய பக்கச்சாய்வும் அவரை பளீரென்று பச்சையாக காட்டிக்கொடுக்கிறது. உணர்ச்சிகள் அடிமனத்தில் கிடக்கும் உண்மைகளை காட்டிவிடும் என்பார்கள் அது ஜெ வினுடைய கட்டுரையின் இறுதி சொல் வரை கானக்கிடைக்கிறது. ஆனால் அவருடைய உணர்ச்சிகளை நாம் பொய் என்று சொல்லவில்லை மாறாக அவருடைய இந்த உணர்ச்சி இந்த நாட்டினுடைய உணர்ச்சி அல்ல, இந்த மக்களுடைய உணர்ச்சி அல்ல ஏனெனில் அவருக்குள் பொங்கிப்பிரவாகமெடுத்து இணையத்தின் வழியே கொட்டியோடிய இந்த உணர்ச்சிக்கான நியாயங்களை அவர் ஓரிடத்திலும் கூறவில்லை, தருக்கம் இல்லை, ஏனெனில் ஜெயமோகனுக்கு அவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நேரமில்லை, விருப்பமில்லை,மனமில்லை [பார்க்க கடிதங்கள்] உண்மையான உணர்ச்சிக்கான நியாயம்,பெரும்பாண்மை மக்களின் நலனிலிருந்து எழும் உணர்ச்சிக்கான தருக்கம் ஆகியவை இயல்பாக வரும். உண்மைகளிலிருந்து எழும் மகிழ்ச்சி,துயரம் போன்ற பல வகையான உணர்ச்சிகள் அந்த உண்மை விவரங்களிலிருந்தே தன் உணர்ச்சிக்கான நியாயத்தை முன் வைக்கும்,தருக்கம் புரியும். ஆனால் ஆயிரம் பக்கம் இரண்டாயிரம் பக்கம் என்று கைகளாலும், கால்களாலும் எழுதும் ஓர் எழுத்தாளனுக்கு தன் பக்க நியாயத்தை நாலு பக்கம் கூட எழுத முடியவில்லை,ஆனால் அவரது உணர்ச்சிகளை புரிந்து கொண்டு எல்லோரும் தன்னைப்போலவே ஜெய்ஹிந்த் கோக்ஷம் மட்டும் போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நியாயமும், உண்மையுமற்ற தன்னுடைய உணர்ச்சிகளுக்காக அது உண்மையா,பொய்யா,சரியா,தவறா என்று கூட பார்க்காமல் ஊரே கூடி அழ வேண்டும் அல்லது ஊரே கூடி சிரிக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது பக்கா மிடில் கிளாஸ் அரசியலாகும்.
continue read
Renuga-Ajitha and Stalin’s blog
continue read
Renuga-Ajitha and Stalin’s blog
No comments:
Post a Comment