
இன்று இந்தியாவில் அதிலும் குறிப்பாக மும்பையில் உள்ள அனைவரின் பேச்சிலும் தீவிரவாதம் என்ற சொல் ஒரு முறையாவது உச்சரிக்கப்பட்டிருக்கும்,பல அப்பாவி இசுலாமியர்கள் வழக்கம் போல் புயலுக்குப்பின்னான சோகமாக விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படலாம். தாக்குதலில் இறந்த இந்துக்களின்,இசுலாமியர்களின் சொந்தங்கள் கனத்த இதயத்தோடு நொடிகளை கடத்தலாம்.
புயல் போல் நடந்து முடிந்துவிட்ட இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட இரு நூறு உயிர்கள் பலியாகியிருக்கிறது.ரயில் நிலையங்களில் நின்று இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இரையாகிப்போன அப்பாவி பயணிகளுக்கும்,ஒட்டலில் பணிபுரிந்த பணியாளர்களுக்கும்,சமையல்காரர்களுக்கும்,இன்னும் இந்த தாக்குதலில் இறந்த அனைத்து அப்பாவி உழைக்கும் மக்களுக்கும் நாம் நமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவிப்போம்,அதே நேரத்தில் இந்த பயங்கரவாத தாக்குதலின் நுட்பமும்,வேகமும்,உயிரையே இழக்கும் ஆவேசமும் கூடியிருப்பதையும் இதற்கான காரணிகளை,உற்றுக்கண்னை,இதன் தோற்றுவாயை ‘நடுநிலையாளர்களுக்கு’ மீண்டும் ஒரு முறை நினைவூட்டுவதும்,இந்தியாவில் தொடரும் இந்த பயங்கரவாதத்தின் வினை எது என்பதை பார்க்க வைப்பது அவசியமானது என்று கருதுகிறேன்.மற்ற குண்டு வெடிப்புகள், தாக்குதல்கள் அனைத்தின் போதும் பீதியை கிளப்பி இந்து மதவெறிக்கு தூபமிட்டு வெறியை கிளறிவிட்டுக்கொண்டிருந்த இந்திய புளுகுனி ஊடகங்கள் தற்போது கண்ணீரும் கம்பலையுமாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றன.இந்த தாக்குதல் சம்பத்திலிருந்து புதிதாக எந்த பீதிகளையும் கிளப்பமுடியாமல் இந்தியாவையே தேசபக்த,இந்துமதவாத உணர்ச்சிகளுகுள் மூழ்கடிக்கும் செண்டிமென்ட் கட்டத்தை எட்டிவிட்டார்கள்.