Wednesday, October 8, 2008

PERIYAR 130


மிக கேவ‌ல‌மாக இருக்கிறது.த‌மிழ‌க‌த்தில்‌,பெரியார் பிற‌ந்தத‌மிழ‌க‌த்திலிருந்து கொண்டு பாசிச வெறிய‌ர்க‌ள் மோடிக்கும்அவ‌னுடைய பார்ப்ப‌ன‌க்கூட்ட‌த்திற்கும் பிர‌ச்சார‌ம் செய்கிறார்க‌ள். குஜராத்தில் கவுசர் பானு என்கிற க‌ர்பினி பெண்ணின் வ‌யிற்றைக்கிழித்து சிசுவை உருவி அதை சூலாயுத‌த்தால் கூறு போட்டு அப்போதும் வெறி அட‌ங்காம‌ல் அந்த சிசுவை கொதிக்கும் தார்ச்சாலையில் வீசியெறிந்து அத‌ன் மேல் பெட்ரோலை ஊற்றி எறித்த வ‌க்கிர மிருக‌ங்க‌ள் த‌மிழ் நாட்டையும் குஜ‌ராத்தாக மாற்ற முய‌ற்சிக்கிறார்க‌ள்.

3000 அப்பாவி மக்களை இதே போல பச்சை படுகொலை செய்த மோடி என்கிற நர மாமிச வெறியனை ஆத‌ரித்து பேசி விட்டு நாத்திக இய‌க்க‌ம் வ‌ள‌ர்த்த த‌மிழ‌க‌த்தில் பாசிஸ்டுக‌ள் ந‌ட‌மாட முடிகிறது என்றால் ந‌ம‌க்கெல்லாம் சொர‌ணை இல்லையா ?

நாடு முழுவது முஸ்லீம்கள் குண்டு வைக்கிறார்களே அவர்களை ஏன் கேட்பதில்லை என்கிறார்கள். நன்றாக படித்த முஸ்லீம் இளைஞ‌ர்களானாலும் சரி படிக்காத பாமர இஸ்லாமியனானாலும் சரி அவர்களை குண்டு வைப்புகளின் மூலம் பயங்கரவாதிகளாக்கியது இந்து மத வெறியர்கள் தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். குஜராத்திலும் அதற்கு முன்பு மும்பையிலும் என்ன நடந்ததோ அதற்கான எதிர் வினை தான் குண்டு வைப்புகள்.இஸ்லாமிய தீவிரவாதம்,பயங்கரவாதம் என்று கூச்சலிடுகிறார்களே இந்துமத வெறியர்கள் அதை வளர்த்து விட்டதே அவர்கள் தான்.

கோத்ரா ரயிலை எரிப்பார்கள்,குடலை உருவி வீசுவார்கள்,சிசுவை பிளந்து எறிவார்கள்,ப‌ச்சை சிறுமிக‌ள் முத‌ல் மூத‌ட்டிக‌ள் வ‌ரை இரக்கமின்றி வல்லுறவிற்குள் தள்ளி விட்டு கொன்றெரிவார்கள். அதன் பிறகு அவர்கள் சுவையான பழங்களை போல இனித்தார்கள் அவர்களை வேண்டிய மட்டும் சுவைத்தோம் என்று துளியும் அச்சமின்றி சொல்கிறார்க‌ள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு ஒரு இஸ்லாமியன் அமைதியாக‌ தொழுகை நடத்த வேண்டுமென்று விரும்புகிறார்களா இந்துமத வெறியர்கள்? கல்லை எடுத்தால் நாய்கள் கூட குரைத்து எதிர்ப்பு தெரிவிக்கும்.

வாழ்வு ர‌ண‌மாக்க‌ப்பட்டு ஒவ்வொரு நொடியும் காயத்திலிருந்து இரத்தம் கசியும் சாவை பாசிஸ்டுகளிடமிருந்து பெற்ற‌ ம‌னித‌ன் அமைதி காக்க‌ வேண்டுமா?
இந்து மதவெறி பாசிஸ்டுகளால் உருவி எடுக்கப்பட்ட‌ உயிர்கள் பல ஆயிரம். தன் ம‌னைவியின்,த‌ங்கையின்,தாயின் க‌ற்பு த‌ன் க‌ண் முன்னாலேயே சூறையாட‌ப்ப‌டுவ‌தை கண்டு துடிதுடித்து பாசிச வெறியர்களை நோக்கி தடுக்க‌ பாயும் அந்த தாயின் மகன்,அல்லது அந்த பெண்ணின் கனவன் மதவெறி பாசிஸ்டுகளால் அவர்கள் கண்ணெதிரிலேயே கை கால் வெட்டியெறியப்படுவதை தூரத்தில் ஒளிந்து நின்று பார்க்கும் கடைசி தம்பி அல்லது அந்த குடும்பத்தின் தலைவரான அப்பா என்னவாக வேண்டும் என்று விருபுகிறார்கள் இந்து மதவெறியகள்?

இந்தும‌த‌ வெறிய‌ர்க‌ளின் சோத‌னைச்சாலையாக்க‌ப்ப‌ட்ட‌ குஜ‌ராத்திலும் அதே போல இன‌ப்ப‌டுகொலை ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ வேறு ப‌ல‌ இட‌ங்க‌ளிலும் மதவெறியர்களுக்கு ஆதரவாக‌ இந்த அரசும் காவல் ‌துறையும் வெளிப்படையாக செயல்பட்டுள்ளது. காவலர்களாவது காப்பாற்றுவார்கள் என்று அவர்களிடம் உயிர் பிச்சை கேட்க‌ ஓடிய மக்களை அவர்களின் காலடியில் வைத்தே வெட்டினார்கள். அதன் பிறகும் அந்த மக்கள் நம்பிக்கை இழந்து விடவில்லை நீதியையே நாடினார்கள், நீதி மன்றங்களை நம்பினார்கள் ஆனால் அங்கேயும் அவர்கள் துரோகத்தையே எதிர் கொண்டார்கள்.

இவ்வளவு கொடுமைகள் நடந்த போதும் இந்துக்கள் வாயை திறக்கவில்லை.மத‌ச்சார்பின்மை,ஜனநாயகம் பேசும் இந்துக்கள் கூட‌ வாய் திறக்காத நிலையில் கடைசியாகத் தான் அவர்கள் பயங்கரவாதிகளானார்கள்.வெடிகுண்டுகள் அவர்களின் துயரத்தை பகிர்ந்து கொண்டது.

இப்ப‌டி இந்த நாடு முழுவதும் துரோகத்தையே எதிர் கொண்ட மக்கள்‌ அமைதியாக வாழ வேண்டுமா ? அப்படி வாழ இயலுமா என்பதை நீங்கள் யோசித்து பாருங்கள்.ஒரு இஸ்லாமியருடைய இடத்தில் உங்களை வைத்து பாருங்கள்.மேலே கூறப்பட்ட சம்பவங்கள் அனைத்தையும் உங்கள் வாழ்வின் உயிரான‌ உறவுகளின் மீது ஓட்டிப்பாருங்க‌ள்.அவ‌ர்க‌ளுக்கு அந்நிலை ஏற்பட்டால்‌‌ நீங்க‌ள் தியான‌மா செய்து கொண்டிருப்பீர்க‌ள் ?

என‌வே நியாய‌ம் ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் கோப‌ம் இவ்வாறு குண்டுகளாக‌ வெடிக்கிற‌து.யாரும் விரும்பி பயங்கரவாதிகளாவதில்லை ஆக்கப்படுகிறார்கள் இங்கு இஸ்லாமியர்கள் பயங்கரவாதிக‌ளாக‌ அவதாரம் எடுத்திருப்பதற்கு காரணம் இந்து பாசிஸ்டுகள்.அவர்கள் தான் அவ‌ர்க‌ளை ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளாக்கினார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு உரிய‌ நீதி நேர்மையாக‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌டாத‌ வ‌ரை குண்டுக‌ள் வெடித்துக்கொண்டே தான் இருக்கும். நாம் ப‌ய‌ணிக்கும் ர‌யிலிலோ, பேருந்திலோ, நமது இருக்கையின் அடியிலோ கூட‌ குண்டுகள் இருக்கலாம் அவை வெடித்து சித‌றி நாமே கூட இறக்க நேரிடும் எனினும் இது தான் உண்மை .

இஸ்லாமிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை நாம் எந்த வகையிலும் ஆத‌ரிக்க‌வில்லை. இங்கு கூற‌வ‌ருவ‌து குண்டு வைப்புகளுக்கு அவர்கள் முக்கியமான கார ண‌ம் அல்ல என்ப‌தை தான்.
இராக்கில் ஏன் ஒவ்வொரு நாளும் குண்டுக‌ள் வெடித்துக்கொண்டே இருக்கிறது ? அமெரிக்க‌ கூலிப்ப‌டை இராணுவ‌ம் இராக்கில் ந‌ட‌த்திய‌ அட்டூழிய‌ங்க‌ளுக்கு இராக்கியர்களின் எதிர்வினை தான் அது. அமெரிக்க பொறுக்கி படை இராக்கிலிருந்து வெளியேறாத‌ வரை குண்டுகள் வெடித்துக்கொண்டே தான் இருக்கும்.மேலும் அவர்கள் தற்கொலை படை தாகுதலிலும் ஈடுபடுகிறார்கள்.

அதே போலத்தான்‌ இந்து மதவெறி பாசிஸ்டுகள் இசுலாமியர்களை கொன்று குவிக்கும் வரை குண்டுகளுக்கான தேவையும் இருந்து கொண்டே தான் இருக்கும். இன்று வெறும் குண்டுகள் வெடிக்கின்றன நாளை இராக்கில் நடப்பது போல தற்கொலை படை தாக்குதல்களும் கூட நடக்க வாய்புள்ளது. இந்துவெறியர்களை எதிர்த்து முறியடிக்காமல் இசுலாமிய பயங்கரவாதத்தை என்ன சட்டங்களை கொண்டு வந்தும் தடுத்து நிறுத்த முடியாது.இப்போது ஒரிசாவில் கிறித்தவர்கள் மீதும் கொலைவெறி தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள்.இது நீடித்தால் நாளை கிறித்தவர்கள் இசுலாமியர்களோடு இணையலாம். தாக்குதல்களை இணைந்து நடத்தக்கூடும்.சிறுபான்மை மக்களின் மீதான அவர்களின் ஒவ்வொறு தாக்குதலும் வெடிகுண்டுக‌ளை உற்ப‌த்தி செய்து கொண்டே இருக்கும்.இத‌ற்கெதிராக‌ இந்தும‌த‌ வெறிய‌ர்க‌ளை ம‌க்க‌ள் ம‌த்தியில் அம்ப‌ல‌ப்ப‌டுத்தி த‌னிமைப்படுத்தி முறியடிப்பது ஒன்றே குண்டுக‌ளை செய‌ல் இழ‌க்க‌ச்செய்யும்.

இப்போது ஆர்க்குட்டில் என்ன நடக்கிறது குஜராத்தில் பேசுவதை போல மதவெறியர்கள் எவ்வளவு துனிச்சலோடு பார்ப்பனியத்தையும்,மோடியையும் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்கள்.

தோழ‌ர்க‌ளே இது ந‌ம‌க்கு இழுக்கு,தந்தை பெரியாருக்கு அவ‌மான‌ம். நாம் அமைதி காத்தால் த‌மிழ‌க‌ம் குஜ‌ராத்தாக மாறும் நாள் தூரத்தில் இல்லை. பிற‌கு பெரியார் பிற‌ந்த ம‌ண்ணை இழ‌ப்போம். மீண்டும் இர‌ண்டாயிர‌ம் ஆண்டுக‌ள் பார்ப்பனிய‌த்தின் நுக‌த்த‌டியில் அடிமைக‌ளாக கிட‌த்த‌ப்ப‌டுவோம். மீண்டும் இர‌ண்டாயிர‌ம் ஆண்டுக‌ள் போராட வேண்டும் என்ப‌தை பகுததறிவு தந்தையின் 130வது பிறந்த நாளின் எச்ச‌ரிக்கையாக இங்கு பதிவு செய்து மான‌முள்ள த‌மிழ‌ர்க‌ளாக,த‌ந்தைக்கேற்ற த‌னைய‌ர்க‌ளாக பாசிச ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை வீழ்த்த உறுதி ஏற்குமாறு ஆர்க்குட்டில் உள்ள‌ அனைத்து தோழ‌ர்களையும் கேட்டுக்கொள்கிறேன்

No comments: